
டிஜிட்டல் காலத்தில், எந்த ஒரு எளிய தருணமும் இணையத்தில் வைரல் ஆகி விடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள குளோபல் அகாடமி ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வியாளக்கழகத்தில் பணியாற்றும் ஒரு பேராசிரியர், தன்னுடைய திடீர் நடனத்தால் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மாணவர்களுக்கு வழக்கமான பாடங்களை கற்பிக்கும்போது, ஒரு சிறிய இடைவெளியில் தனது நடனத்திறனை வெளிப்படுத்திய அவர், அவருடைய மாணவர்களையும், உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களையும் ஈர்த்துள்ளார். இந்த வைரல் வீடியோ, சமூக ஊடகங்களில் மிகுந்த பாசிட்டிவ் எதிர்வினைகளை பெற்றுள்ளது. மாணவர்களின் உற்சாக குரல்களுடன் கூடிய இந்த காணொளி, பலரின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, கல்விக்கட்டமைப்பிற்குள் புதிய ஊக்கத்தை உருவாக்கியிருக்கிறது என சமூக வலைதள பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram