
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுக கட்சிக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதான் தற்போது தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாகவும் அதிமுகவுடன் விசிக கைகோர்க்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் போராட்டத்தில் மட்டும்தான் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததாக ஒரு சாரார் கூறுகிறார்கள். இந்நிலையில் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது அவர்களுடைய விருப்பம் என்று கூறினார். மேலும் அதிமுக விசிக அழைப்பை நேற்று போராட்டத்தில் கலந்து கொள்ளுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.