
கர்நாடக மாநில த்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிந்து. இவருக்கு instagram மூலமாக கடந்த 2019 ஆம் வருடம் கன்னட சினிமா இளம் இயக்குனரான விஸ்மயா கவுடாவோடு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் உடல் ஆரோக்கியம் குறித்து அடிக்கடி கேட்டு வந்துள்ளார் விஸ்மயா. அதன் பிறகு தான் புதிதாக இயக்கும் டியர் கண்மணி என்ற படத்திற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறியிருக்கிறார். இதற்காக ஆறரை லட்சம் பணத்தை பிந்து கொடுத்துள்ளார். இதனால் கடந்த வருடம் ஆறரை லட்சத்திற்கு விஸ்மயா காசோலை கொடுத்து இருக்கிறார்.
ஆனால் அவரது கையெழுத்து சரியாக இல்லை என்று கூறி வங்கி அதிகாரிகள் அந்த காசோலையை நிராகரித்துள்ளார்கள். இதனை அடுத்து பிந்து விஸ்மயா மீது தன்னை மோசடி செய்வது விட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளார். இதனையடுத்து இளம் இயக்குனரான விசுமையா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அவரிடம் விசாரணை நடத்துவதற்காகவும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தார்கள்.