மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பவ நாளில் சித்தேஷ் பஜ்ரங் சால்வி மற்றும் அவருடைய நண்பர் டாக்டர் டிவே படேல் ஆகியோர் மருத்துவமனையின் அருகே அமர்ந்து செல்போனில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அந்த வீடியோவை பார்த்து சிரித்த நிலையில் அதனை கவனித்த ஒரு கும்பல் திடீரென அவர்களுடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட 10 பேர் சேர்ந்து அவர்கள் இருவரையும் அடித்த நிலையில் இது குறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுடைய பெயர் அமன் அசிம் ஷெய்க் மற்றும் சித்தார்த் ராஜூ என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.