விதிமீறல் புகார் எழுந்ததை தொடர்ந்து paytm பேமெண்ட் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு செயல்பாடும் செய்ய முடியாது என கூறிய நிலையில் வாடிக்கையாளர்கள் நலனை கருதி மார்ச் 15ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பேடிஎம் பேமெண்ட் வங்கியை அதன் அங்கீகரிக்கப்பட்ட பாஸ்டேக் வழங்குனர்களின் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது.

இந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. எனவே பேடிஎம் பாஸ்டேக் வைத்திருப்பவர்கள் மார்ச் 15ஆம் இன்றுக்குள் இருப்பு தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அதன் பிறகு ரீசார்ஜ் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான பயனாளிகள் இதனை பயன்படுத்தி வரும் நிலையில் புதிய FASTag சேவையை பெற உடனடியாக பேடிஎம் FASTag கணக்கை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்கை மூடும் போது வைப்புத்தொகை மற்றும் மினிமம் பேலன்ஸ் பேடியம் வாலட்டில் திருப்பி செலுத்தப்படும். இல்லையென்றால் உங்கள் பணம் கிடைக்காது. மேலும் விவரங்களுக்கு 1800 – 120- 4210 என்ற எண்ணை தொடர்பு கொள்க.