மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. குறிப்பாக பால் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன . அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு ஒரு அறிவித்துள்ளது. அதாவது அம் மாநிலத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ஐந்து ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பலன் பெற முடியும். அந்த மாநிலத்தில் கூட்டுறவு பால் திட்டங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ஐந்து ரூபாய் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கொடுக்கும் கால்நடை வளர்ப்போர்க்கு மட்டுமே இந்த மானிய வசதியின் பலன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாடு மேய்ப்பவர்கள் தனியாரிடம் பால் விற்கும் நபர்கள் இதற்கு பலனை பெற முடியாது. இந்த திட்டத்தின் பலன் ஆனது ஜனவரி 11(இன்று) முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.