
காரைக்காலில் வருடம் தோறும் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இன்று விழா நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் அரசு தேர்வுகள் மற்றும் ஜவர்கலால் நவோதயா வித்யாலயா நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று விடுமுறை வழங்கப்பட்டதால் அதனை ஈடு செய்வதற்கு ஏதுவாக பிப்ரவரி 15ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.