இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்றைய தினம் நிகழ உள்ளது. இந்தப் பகுதி சந்திர கிரகணம் காலை 10.23 மணி முதல் பிற்பகல் 3.02 மணி வரை நடைபெற உள்ளது. பகல் வேலை என்பதால் இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. கிழக்கு ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், வட துருவம், கிழக்கு ஆசியா, தென்மேற்கு ஐரோப்பா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே இதனை பார்க்க முடியும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரகிரகணம் ஏற்படுகின்றது. இது அறிவியல் ரீதியான உண்மையாகும்.