இன்று (04.02.2023) சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாளை  ஈடு செய்யும் வகையில்இன்று  அனைத்து பள்ளிகளும் முழுநேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.