
கொளத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கன்னிகாபுரம் பகுதியில் தன்னை வரவேற்பதற்காக காத்திருந்த மாணவர்களுக்கு பாக்ஸிங் கிளவுஸில் ஆட்டோகிராஃப் போட்டும், செல்ஃபிக்கு போஸ் கொடுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ந்தார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ₹44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டிள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது வடச்சென்னை ஒராண்டுக்குள் வளர்ந்த சென்னையாக மாறும் என கூறியுள்ளார்.