
பிரபல சமூக வலைதள நிறுவனமான telegram நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ். இவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 39 வயது ஆகிறது. இவர் அந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் தான் 100 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதாக தற்போது ஒரு ஆச்சரிய தகவலை கூறியுள்ளார். அதாவது உலக அளவில் 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உயிரியல் தந்தையாக அவர் இருக்கிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக அவரின் நண்பர் ஒருவர் குழந்தையின்மையால் மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார்.
இதனால் அவருக்கு விந்தணு தானம் செய்துள்ளார். அதாவது அவருடைய நண்பர் மிகவும் வேண்டி கேட்டுக்கொண்டதால்தான் அவர் விந்தணு தானம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் பலருக்கு விந்தணு தானம் செய்து வருகிறார். அவர் முதலில் விந்தணு தானம் செய்ய மிகவும் தயக்கம் காட்டிய நிலையில் மருத்துவர்கள் அவரிடம் தரம் குறைந்த விந்தணுக்கள் இருப்பதால் இப்படி செய்வது சமூக சேவை என்று கூறியுள்ளார். அதன் பிறகு தான் குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் பல தம்பதிகளுக்கு அவர் உதவுவதற்காக விந்தணு தானம் செய்துள்ளார். மேலும் அவருடைய விந்தணுக்கள் IVF கிளினிக்கில் உறைய வைக்கப்பட்டுள்ளதால் இன்னும் பலருக்கு அது எதிர்காலத்தில் உதவும் என்று தெரிவித்துள்ளார்.