ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறுவது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியது. தணிக்கை நடைமுறைகள் இன்னும் முடிவடையாத நிலையில், ஏன் இவ்வளவு அவசரமாக வழக்கு தொடர்ந்தீர்கள் என்று தயாரிப்பு நிறுவனத்தை நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சான்றிதழ் பெறுவதற்காக இன்னும் சில நாட்கள் நீங்கள் காத்திருந்திருக்கலாம் என்று நீதிபதி தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

​சென்சார் போர்டு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஒரு படத்தின் சான்றிதழ் வழங்கும் நடைமுறை சட்டப்படி நடந்து கொண்டிருக்கும்போது, அதில் குறுக்கிட்டு நீதிமன்றத்தை நாடுவது சரியானதா என்ற கோணத்தில் விவாதித்தனர். தயாரிப்பு நிறுவனம் காட்டிய அவசரம் இப்போது அவர்களுக்கே பின்னடைவாக மாறுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவாகும்.