பெரும்பாலும் மக்கள் நீண்ட தூரம் பயணத்திற்காக ரயில் பயணத்தை விரும்புகிறர்கள். பயணிகளுடைய வசதிக்காக ஐஆர்சிடிசி அவ்வபோது பல விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பயணிகள் இரவில் நிம்மதியாக தூங்குவதை உறுதி செய்யும் விதமாக சில விதிகளை புதுப்பித்துள்ளது. இது வந்தே பாரத் ராஜ்தானி உள்ளிட்ட அனைத்து ரயில்களுக்குமே இந்த விதி பொருந்தும். இரவு பயணத்தின் பொழுது ரயிலில் பொருத்தப்பட்டுள்ள இரவு விளக்கை தவிர எந்த விளக்கத்தையும் பயன்படுத்தக் கூடாது.

இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் சத்தமாக பேசக்கூடாது. ஏனெனில் அந்த நேரத்தில் சக பயணிகளின் தூக்கம் கெட்டுவிடும். அதேபோல கீழ் பெர்த் பயணிகள் தங்கள் இருப்புகளை திறப்பதை தடுக்க முடியாது. ஆன்லைன் உணவு சேவைகள் இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் வழங்க முடியாது. இ கேட்டரிங் சேவைகள் மூலம் இரவு ரயிலில் உங்கள் உணவை அல்லது சிற்றுண்டி ஆர்டர் செய்து கொள்ளலாம். டிக்கெட் பரிசோதகர் கூட இரவு 10 மணிக்கு மேல் பயணிகளின் டிக்கெட்டை சரி பார்க்க முடியாது.

போர்டிங் செய்பவர்கள் டிக்கெட்டை பரிசோதனை செய்யலாம். தூக்கத்தில் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இரவு 9 மணிக்கு மேல் தூங்கும் நேரமாக இருந்தது. ஆனால் அந்த விதிமுறை தற்போது இரவு 10 மணி ஆக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.