இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் எட்டாம் தேதி முதல் சென்னை மற்றும் கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த ரயில் வாரத்தின் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படும். கோவையிலிருந்து காலை 6 மணிக்கு கிளம்பி சென்னையை 12 .10 மணிக்கு அடையும் என்றும்,சென்னையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு கிளம்பி கோவையை மாலை 6.10 மணிக்கு அடையும் என்றும் கூறப்படுகிறது.