அரசுக்கு சொந்தமான bsnl நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பரான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் 5 மாதங்கள் கொண்ட வேலிடிட்டியின்  விலை ₹997 மட்டுமே. இந்த வேலிடிட்டியில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு பெற முடியும். அதாவது

வேலிடிட்டி காலம் – 60 நாட்கள் (தோராயமாக 5 மாதங்கள்)

டேட்டா – மொத்தம்  320 ஜிபி (ஒரு நாளைக்கு 2 ஜிபி)

அழைப்பு – அன்லிமிடெட் கால்

எஸ்எம்எஸ் – ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்

ரீசார்ஜ் தொகை – ரூபாய் 997

இந்தத் திட்டம் மற்ற நிறுவனங்களின் திட்டத்தை விட மிகவும் மலிவானதாக இருக்கிறது. நாட்டின் பல இடங்களில் இந்த நெட்வொர்க் இருக்கிறது. அதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் BSNL நெட்வொர்க்  4ஜி சேவையை வருகிற அக்டோபர் 15-ம் தேதிக்குள் நாடு முழுவதும் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஆங்காங்கே மொபைல் டவர்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதே போன்று BSNL நிறுவனம் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் 5g சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 5g சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வரும் ஆண்டுகளில் பயனர்களுக்கு அதிவேக இணையத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.