சன் தொலைக்காட்சி குழுமம் ரசிகர்களின் பொழுதுபோக்குக்காக பல்வேறு சேனல்களை தொடங்கியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக ஹாலிவுட் படங்களுக்கு என்று பிரத்தியேகமாக சன் ஹாலிவுட் என்ற சேனலை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹாலிவுட் படங்கள் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டு வருகிறார்கள். அப்படி தமிழில் டப் செய்து வெளியான படங்களை 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய இருக்கிறது சன் ஹாலிவுட்.