நாடு முழுவதும் ஏற்படும் வெள்ள அபாயத்தை ஒரு நாள் முன்னதாகவே கணிக்கும் வகையில், ‘ ஃப்ளட்வாட்ச் ‘ (FloodWatch) என்ற செயலியை  மத்திய நீர் வளத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இது நாட்டின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த ஏழு நாட்கள் வரையிலான முன்னறிவிப்புகளை பொதுமக்களுக்கு வழங்குகிறது.

இதன்மூலமாக நாடு முழுவதும் உள்ள வெள்ள சூழ்நிலைகளை சரிபார்க்க முடியும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியில், குரல் மூலமாகவும் தகவலை அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.