நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக்குச் சென்று மாற்றிக் கொள்ள முடியாதவர்களின் சிரமத்தை குறைப்பதற்கு அமேசான் நிறுவனம் தற்போது புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன் மூலமாக வீட்டில் இருந்து கொண்டே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும். Cash load at doorstep என்ற திட்டத்தின் மூலமாக கேஒய்சி செய்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி ஏஜெட்டுகளை அனுப்பி மீதம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை அமேசான் பெரும். ஒரு மாதத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை amazon pay balance கணக்கில் நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதேசமயம் மக்கள் ஆன்லைனில் கொடுக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் பணமாக அவர்களுக்கு திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.