
தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள பழவந்தாங்கல் பகுதியில் விஜய் படத்துடன் கூடிய போஸ்டரை ஓட்டுவதற்கு தமிழக வெற்றி கழகத்தினர் சென்றுள்ளனர். அப்போது அந்த போஸ்டரை போலீசார் பறிமுதல் செய்ததோடு விஜய் படத்துடன் இனி போஸ்டர் ஒட்டக்கூடாது என்று DC உத்தரவிட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் கூறுகிறார்.
அப்போது வருங்கால முதல்வர் என்றெல்லாம் கூறி போஸ்டர் அடிக்கவில்லை எனவும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தான் போஸ்டர் அடித்துள்ளதாகவும் தமிழக வெற்றிக்கழகத்தினர் கூறுகிறார்கள். இருப்பினும் மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறி இனி விஜய் படத்துடன் போஸ்டர் எதுவும் ஒட்டக்கூடாது என்று அவர் கூறுகிறார். இது தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் போஸ்டரை பார்த்து திமுகவுக்கு பயமா? ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக காவல்துறை. அப்படிப்பட்ட காவல்துறையை இன்று வீட்டு வாட்ச் மேன்கள் போன்று திராவிட மாடல் அரசு நடத்துகிறது என்று பதிவிட்டுள்ளனர். மேலும் இதோ அந்த வீடியோ,
போஸ்டரை பார்த்தே பயப்பிடும் திமுக வினர்.!!
ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக காவல்துறை . அப்பேர்ப்பட்ட காவல்துறையை இன்று எப்படி மாற்றி அவர்கள் வீட்டு watchman கள் போல நடத்துகிறது இப்போதைய மாடல் அரசு
![]()
pic.twitter.com/ljctWAsJln
— Sangeetha -TVK
(@sangeet29332013) January 1, 2025