
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் புதிதாக voice note transcription என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் குரல் பதிவாக ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அனுப்பப்படும் மெசேஜை அதே மொழியில் எழுத்து வடிவமாக மாற்றி அனுப்பலாம்.
இந்நிலையில் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட 5 மொழிகளில் வாய்ஸ் மெசேஜ் எடுக்கும் நிலையில் அந்த வாய்ஸ் மெசேஜை எழுத்து வடிவில் மாற்றி Text வடிவில் இனி அனுப்பலாம். இந்த புதிய அப்டேட் முதலில் ஆண்ட்ராய்டு போன்களில் வர இருக்கிறது. மேலும் இந்த புதிய அம்சம் நீண்ட காலமாக சோதனையில் இருந்த நிலையில் தற்போது அமலுக்கு வர இருப்பது பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.