வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட மொபைல் எண் விவரங்களை தரவில்லை என்றால் பில் போட முடியாது என்று சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் வியாபாரிகள் கூறுகின்றன. இதை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையாகும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு தகவல்களை சேமிப்பது தவறான செயலாகும். எனவே குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்களை தர வேண்டும் என்று சில்லறை வியாபாரிகள் வற்புறுத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.