இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட்டை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

இல்லையென்றால் பொதுப்பெட்டியில் பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணிப்பவர்களுக்கு தையல் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே டிக்கெட் பதிவு செய்யலாம். ஐ ஆர் சி டி சி செயலியை திறந்து ரயில் சின்னத்தில் கிளிக் செய்தால் கட்டணம் மற்றும் இருக்க விவரங்கள் என அனைத்தும் தோன்றும். இந்த வசதி ரயில் சேவை தொடங்கும் நிலையங்களில் இருந்து செல்போனுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.