பாமக கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தும் உள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, நமது கட்சியின் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் அனைத்திலும் தொண்டர்கள் கார்களில் வருவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் பெண்கள், முதியவர்கள், பொதுமக்களுடன் வேன்களில் ஒன்றாக பயணித்து அவர்களை பாதுகாப்பாக கூட்டங்களுக்கு அழைத்து வரவேண்டும். இனிமேல் நடத்தப்படும் பாமக கட்சி கூட்டங்களுக்கு இந்த அறிவுரையை ஏற்று கட்சி உறுப்பினர்கள் பின்பற்ற என வேண்டுகோள் விடுத்தார்.