இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சிறப்பு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அஞ்சலக சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கான கேஒய்சி விவரங்களை தபால் துறை மாற்றி உள்ளது. அதாவது இனி 10 லட்சத்திற்கும் மேல் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் கேஒய்சி விவரத்துடன் வருமானச் சான்றிதழை வழங்க வேண்டும்.

முதலீட்டாளர்கள் வருவாய் ஈட்டியதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண மோசடிகளை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர ஆதார் மற்றும் பான் அட்டை கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வருமானவரி சான்றிதழும் கட்டாயமாக்கபட்டுள்ளது.