இந்தியாவில் சுகாதாரத்தை பேணி காப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்தில் இவை அனைத்தும் வீணாகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது மற்றும் குப்பைகளை போடுவது போன்றவற்றிற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இதனை மீறி மக்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பொது இடத்தில் எச்சில் துப்புவது மற்றும் குப்பை கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.அதனைப் போலவே 6 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உள்ளவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 150 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.