
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றனர். அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றத்தில் இருந்து அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வருகிறது. குறிப்பாக பெண்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் விதிக்கப்படுகிறது. அதாவது பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் தொடங்கி ஆடை கட்டுப்பாடு வரை விதித்த தலிபான்கள் தற்போது பேச்சு சுதந்திரத்தை கூட பறித்து விட்டனர். அதன்படி பெண்கள் பொதுவெளியில் பேசவும் பாடவும் தங்கள் முகத்தை காட்டவும் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். அதாவது பெண்களின் குரல் தனிப்பட்டது என்பதால் அதை மற்றவர்கள் கேட்கக்கூடாது என்பதற்காக அப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனராம்.
அதன் பிறகு பொதுவெளியில் பெண்களை லேசான மற்றும் மெல்லிய ஆடைகளை அணியக்கூடாது. பெண்கள் முகம் மற்றும் தங்கள் முழு உடலை மறைக்கும்படிதான் ஆடை அணிய வேண்டும். அதன் பிறகு தனியாக பயணம் செல்லும் பெண்கள், உறவினர்கள் அல்லாத ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர்களும் பேசுவதற்கு மற்றும் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்யும்போது தொழுகை நேரம் வந்தால் ஓட்டுநர் பேருந்து நிறுத்திவிட்டு உடனடியாக ஓட்டுனர் நடத்துனர் உட்பட பயணிகள் அனைவரும் தொழுகை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மீதான அடக்குமுறை குறித்து ஐநா சபை கவலைக் கொண்டுள்ளது.