ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளங்களில் ஆண்களைப் போல பெண்களும் மேலாடை இல்லாமல் குளிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடை இன்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆண்களுக்கு ஒரு நீதி தங்களுக்கு ஒரு நீதியா என்று அந்தப் பெண் முறையிட்டதை தொடர்ந்து நகர நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.