இனிவரும் காலங்களில் பெங்களூரு சாலைகளில் டேஷ் போர்டு கேமரா இல்லாமல் கார் ஓட்டுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதாவது பெங்களூரு சாலைகளில் இரவு நேரங்களில் கார் ஓட்டி செல்லும் போது வழிப்பறி கும்பல் பைக்குகளில் வந்து போலியாக தங்களை அந்த கார் மோதி விட்டதாகவும் அதற்கு நஷ்ட ஈடு உடனே வழங்க வேண்டும் என்றும் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.

இந்த குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்துள்ளது. இதனால் கார்களில் டேஷ் போர்டு கேமராக்களை கார் ஓட்டுநர்கள் பொருத்தி வருகிறார்கள்.