சென்னையில் அதிகமானவர்கள் தினந்தோறும் வாடகை ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை போக்குவரத்து கழக காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி வருகின்றனர். ஆட்டோவை புக் செய்தால் செல்ல வேண்டிய இடத்தை கேட்டு அதன் பிறகு தான் டிரைவர்கள் கேன்சல் செய்வார்கள். ஆனால் தற்போது டிரைவர்கள் பயணிகளை  நீண்ட நேரம் காக்க வைத்து அதன் பிறகு கேன்சல் செய்கிறார்கள் .

இதன் காரணமாக பயணிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் பயணிகளுக்கும் அதனால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் டிரிப்புக்கு டிரைவர்கள் ஒப்புக்கொண்டு அதன்பிறகு கேன்சல் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.