பிரான்சில் பொது கல்வியில் பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கி அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு 19ஆம் நூற்றாண்டு சட்டங்கள் தடை விதித்தது. மேலும் முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ந்து வருவதை கையாள வழிகாட்டுதல்களை புதுப்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு பள்ளிகளில் முக்காடு போடுவதை தடை செய்தும் 2010ல் முகத்தை மூடிக்கொண்டு பொது இடங்களில் சுற்றுவதற்கு தடையும் செய்யப்பட்டது. இது அங்கு வசித்து வந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சிலரை கோபப்படுத்தியது. இந்நிலையில் கல்வி அமைச்சரான கேப்ரியல் அட்டல் இனி பள்ளிகளில் பர்தா அணிய முடியாது என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வகுப்பறைக்குள் செல்லும்போது மாணவர்களை பார்த்து அவர்களின் மதத்தை கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.