அரியானா மாநிலத்தில் பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தேசப்பற்று என்பது நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் இருக்க வேண்டும். எனவே ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் குட் மார்னிங் சொல்ல வேண்டாம்.

அதற்கு பதிலாக அனைவரும் சேர்ந்து ஜெய்ஹிந்த் என்று சொல்ல வேண்டும். இந்த வார்த்தையை மாணவர்கள் வழக்கமாக பயன்படுத்தினால் அவர்களிடம் ஒற்றுமை கூடும். நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். மேலும் இனி அனைத்து அரசு ஊழியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் குட் மார்னிங் அட்ரஸ் சொல்லுவதற்கு பதில் ‌ ஜெய் ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.