சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுரேஷ்கோபி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கேரள மக்கள் வழங்கிய ஆசிர்வாதத்தால் தான் நான் எம்பியாக தேர்வு செய்யப்பட்டேன். நான் கேரளாவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கும் எம்.பி ஆக செயல்படுவேன். நான் மக்களுக்காக எதை முக்கியமாக செய்ய வேண்டுமோ அதை நிச்சயம் செய்வேன்.

என் துறை சார்பில் தமிழ்நாட்டிற்கு பல திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை சார்பாக எந்த திட்டமாக இருந்தாலும் அதை தமிழ்நாட்டுக்கு செய்து கொடுக்கலாம். அதன் பிறகு பெட்ரோலியம் துறை குறித்து எனக்கு அனுபவம் இல்லாததால் அது பற்றி கற்றுக் கொண்டு வருகிறேன். நான் கேரளாவில் பிறந்தாலும் என்னை வளர்த்த இடம் சென்னை தான். எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்து தூங்குவதற்கும் இடம் கொடுத்தது. நான் தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறேன் என்று கூறினார்.