
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது தனியார் பள்ளிகளில் அனுமதி இன்றி எந்த ஒரு முகாம் நடத்தினாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அந்த பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார். அதன் பிறகு தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளாக இருந்தாலும் கண்டிப்பாக முகாம்கள் நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம்.
அதோடு சிறுமிகளுக்கு எதிராக ஏதேனும் தவறு நடந்தால் நிச்சயம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் கிருஷ்ணகிரியில் போலியான என்சிசி முகாம் நடத்தி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது அரசு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.