இனி சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் இரண்டு மணி நேரம் செல்ல முடியும். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது சென்னை மற்றும் பெங்களூரில் இடையே அதிவேக ரயில் சேவையை தொடங்குவது குறித்து தெற்கு ரயில்வே ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இதற்காக இறுதி வழித்தட ஆய்வை நடத்துவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் ரயில் 220 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் இதன் மூலம் இரண்டு மணி நேரத்தில் பெங்களூரை அடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.