கர்நாடகா மாநிலத்தில் திரைப்படம் மற்றும் கலாச்சார பணியாளர்களுக்கான மசோதாவை அம்மாநில அரசு  சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தது. அதில், திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் ஓடிடி சந்தாக்களுக்கு இரண்டு சதவீத வரி விதிப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவுகள் ஏற்கனவே முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சினிமா மற்றும் கலாச்சார கலைஞர்களுக்காக இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது..