ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவர் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தொடர்ந்து மற்ற போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடையை ஆசிரியர் கிரிக்கெட் வாரியம் நீக்கி உள்ளது. அதாவது டேவிட் வார்னர் தான் செய்த தவறுக்கு மனமுருகி மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்ததால் அதனை  கிரிக்கெட் வாரியம் ஏற்று அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்கியது.

அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக டேவிட் வார்னர் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டதோடு அவர் கேப்டனாக விளையாடவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் தற்போது கேப்டனாக தொடர்வதற்கான வாழ்நாள் தடை நீக்கப்பட்டதால் சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் மற்ற போட்டிகளில் கேப்டனாக விளையாட வாய்ப்பு உள்ளது.