கர்நாடக மாநிலத்தில் கடந்த வருடம் கன்னட மொழி வளர்ச்சியை உறுதி செய்வதற்காக கன்னட மொழி விரிவான மேம்பாட்டு சட்டத்தை அரசு இயற்றியது. இதைத் தொடர்ந்து கன்னட மொழி வளர்ச்சியை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கன்னடத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று முதல்வர் சித்த ராமையா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநில அரசு அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் கன்னடத்தில் மட்டும்தான் பெயர் வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மொழி போன்றவைகள் செழிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.