
நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், சில தனியார் நிறுவனங்கள் வாரத்தின் 7 நாட்களும் வேலைக்கு வர வேண்டும் என்று கூறுவதால் பணி சுமையால் உயிரிழக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசாங்கம் தற்போது ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது.
அதாவது ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டும் நிறுவனத்திற்கு சென்றால் போதும். அதே சமயத்தில் 4 நாட்களும் அவர்களின் பணி நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்படும். இந்த புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் ஐடி ஊழியர்களின் சம்பளம் மற்றும் பி எஃப் தொகையிலும் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.