ஊபர், ஓலா, ராபிடோ போன்ற தனியார் செயலிகளை பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் இருந்தது. அதேபோன்று வாகனம் ஓட்டும் டிரைவர்களிடம் அதிக கமிஷன் பணம்  வசூலிப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரண்டு தரப்பினரும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் டாக்ஸி செயலிகளை உருவாக்குவதற்கு கோரிக்கைகளை வைத்து வந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

அதன்படி டாட்டூ என்ற செயலி தனியாரால் உருவாக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என்றும் இதற்கான நிர்வாக பொறுப்புகளை தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கவுள்ளது. இந்த செயலின் மூலமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நியாயமான வருமானம் நிர்ணயம் செய்யப்படும் என்றும் மக்களுக்கு முறையான கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தவித கமிஷன் பணமும் வசூலிக்க கூடாது என்ற நிபந்தனையை அரசு முன் வைத்துள்ளது.