தமிழக அரசு சார்பாக இயக்கப்பட்டு வரும் அரசு அங்கன்வாடிகளில் ஏகப்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள். மேலும் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வாரத்தில் முட்டையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கன்வாடிகளில் முன் பருவ கல்வியை மூன்று லட்சத்தில் 31,548 குழந்தைகள் இந்த வருடம் முடிவு செய்து வெளியே வர இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி அந்தந்த முதன்மை மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலரோடு சேர்ந்து செயல்பட்டு அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்.

அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கும் அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்  இடங்கள் வழங்க வேண்டும். மேலும் மாணவர்களின் விபரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.