ஓய்வூதியம் பெறுவோர் உடைய வசதிக்காக state bank of india வங்கியோடு இணைந்து “ஒருங்கிணைந்த ஓய்வுதியதார் போர்டல்” என்ற புதிய ஆன்லைன் போரட்டலை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. கட்டண சேவைகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டது.
ஓய்வூதியம் தொடர்பான சேவைகளில் வெளிப்பட தன்மை மற்றும் செயல் திறனை கொண்டு வருவதில் ஓய்வூதியம் பெறும் நபரின் தனிப்பட்ட மற்றும் சேவை தொடர்பான விவரங்களை உள்ளிடலாம். இது ஓய்வூதிய படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதியை வழங்குகிறது. இதனோடு ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களுடைய ஓய்வூதிய ஒப்புதல் குறித்து எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். இது போன்ற ஏராளமான வசதிகள் இந்த போர்ட்டலில் உள்ளது.