இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கும் அரசின் ஆவணங்கள் அனைத்தும் முக்கியமானதாக விளங்குகிறது. அதனால் அனைத்து இடங்களிலும் அரசின் ஆவணங்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதேசமயம் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி டிஜிட்டல் வடிவத்தில் அரசின் ஆவணங்கள் இருந்தால் கூட போதும் என அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருந்தாலும் இந்த ஆவணங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்தில் இருக்க வேண்டும்.

இந்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி உங்களின் வாட்ஸ் அப் மூலமாக அரசின் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து மொபைல் போனில் சேமித்து வைத்துக் கொள்வதற்கான வசதிகளும் வந்துவிட்டன. இதற்கு நீங்கள் டிஜிட்டல் லாக்கர் என்ற கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் உங்களிடம் டிஜிட்டல் லாக்கர் கணக்கு இல்லை என்றால் டிஜிட்டல் லாக்கர் செயலி அல்லது இதற்கான இணையதளத்தை பயன்படுத்தி டிஜிட்டல் லாக்கர் கணக்கை உருவாக்கலாம். அவ்வாறு கணக்கை தொடங்கிய பிறகு மத்திய அரசின் mygov helpdesk என்பதை பயன்படுத்தி முக்கிய ஆவணங்களை whatsapp மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.

  • அதற்கு முதலில் +91 9013151515 என்ற MyGov Helpdesk-ன் எண்ணிற்கு Hi என டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.
  • பின்னர் Digital Locker சேவை மற்றும் WhatsApp goin என இரண்டு தேர்வுகள் திரையில் தோன்றும்.
  • அதில் Digital Locker கணக்கை கிளிக் செய்து உங்களின் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு  பின்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும்.
  • இந்த OTP எண்ணை உள்ளிட்டால் டிஜிட்டல் ஆக்கரில் சேமித்து வைத்துள்ள அரசின் ஆவணங்கள் ஒரு chartboard தோன்றும்.
  • நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் தேவையான அரசின் ஆவணங்களை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்யலாம். உங்களின் ஆவணங்கள் PDF வடிவத்தில் தங்களின் ஸ்மார்ட் போனில் சேமிக்கப்படும்.