இந்தியாவின் பண்டிகைக்காலம் மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இவ்வாறு நீங்கள் முன்பதிவு செய்யும்போது எதிர்பாராத காரணத்தால் அன்று உங்களால் பயணிக்க முடியவில்லை என்றால் உங்களது டிக்கெட்டை நீங்கள் வேறு ஒருவருக்கு மாற்றலாம். இதன் மூலமாக உங்கள் டிக்கெட் கட்டணம் வீணாகாது. இதற்காக புதிய வசதியை ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் டிக்கெட்டை மாற்றும்போது பயணிகள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதாவது உங்களது டிக்கெட்டை உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே நீங்கள் மாற்ற முடியும். ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு இந்த நடைமுறையை நீங்கள் முடிக்க வேண்டும். நீங்கள் முன்பதிவு செய்து இருந்த ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே டிக்கெட்டை எளிதில் மாற்றலாம். அவ்வாறு டிக்கெட்டை மாற்றும்போது கட்டாயம் டிக்கெட் பிரிண்ட் எடுத்து வைத்திருக்க வேண்டும். அதே சமயம் நீங்கள் டிக்கெட்டை மாற்றும் நபரின் ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.