உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல குறுஞ்செயலி நிறுவனமான வாட்ஸ்அப் (WhatsApp), பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்சமயம் ஒரு மிக முக்கிய மற்றும் அதிரடியான பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. இனி வாட்ஸ்அப்பில் யாருடனாவது பேச வேண்டும் என்றால் நமது தனிப்பட்ட மொபைல் எண்களைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை; அதற்குப் பதிலாக இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் செயலிகளைப் போல ‘யூசர்நேம்’ (Username) பயன்படுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அதிரடி வசதிக்கான யூசர்நேம்களைப் பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான பெயர்களில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும் (Pre-booking) வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ​இந்த புதிய அப்டேட் மூலம், அறிமுகமில்லாத நபர்களிடமோ அல்லது புதிய வாட்ஸ்அப் குரூப்களிலோ நாம் உரையாடும் போது, நமது மொபைல் எண் யாருக்கும் தெரியாது என்பதால் பயனர்களின், குறிப்பாகப் பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையான தனித்துவமான யூசர்நேம்களை மற்றவர்கள் எடுப்பதற்கு முன்பாகவே, முன்கூட்டியே நீங்கள் புக் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்குப் பிடித்த பெயர்களை லாக் செய்ய மக்கள் போட்டி போட்டு வருகின்றனர். வாட்ஸ்அப் வரலாற்றிலேயே மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்த சூப்பர் அப்டேட் குறித்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது