நாட்டில் உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும் பணியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. தம்முடைய உயிர்களை ஈன்று பல உயிர்களை காப்பவரின் தியாகங்களை போற்றும் விதமாக இறப்பதற்கு முன்பே உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் இனி அரசு மரியாதை உடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக இருந்து வரும் நிலையில் உறுப்பு தானத்துக்காக மத்திய அரசின் விருதையும் தமிழகம் தொடர்ந்து பெற்று வருகின்றது. தமிழகத்தில் தற்போது 40 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும் 120 தனியார் மருத்துவமனைகளிலும் உறுப்பு தானம் பெறுவதற்கான உரிமம் உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.