சென்னை மற்றும் நெல்லை வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அனைத்து இருக்கை வசதிகளும் முன்பதிவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் சென்னை வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவை முன்னிட்டு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும்.

அதன் பிறகு இரவு 10.25 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் பயணிகள் சேவை செப்டம்பர் 25 முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. அதனைப் போலவே வருகின்ற தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இயக்கப்படும் ரயிலிலும் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.