இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருதி சில விதிமுறைகளை விதித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும், எச்சரிக்கை விடும் விதமாகவும் உள்ளது. அதாவது வங்கி விதித்த விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் மீறாமல் இருக்க வேண்டும்.

அவ்வாறு மீறினால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் யாரும் தெரியாத நபர் பணம் அனுப்புவதற்காக வங்கி கணக்கை கேட்டால் கொடுக்க கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மீறி கொடுத்தால் பணம் மாற்றும் நபர் உங்கள் கணக்கிற்கு மோசடி பணத்தை அனுப்பி பின்னர் அதை திரும்ப கேட்கலாம். அப்போது நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டு சிறைக்கு செல்லும் நிலைமை உருவாகலாம். எனவே வங்கிக் கணக்கின் விவரங்களை தெரியாத நபர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

அதையும் மீறி இதுபோன்ற காரணங்களால் நீங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக சைபர் செல் மற்றும் வங்கிக்கு நேரடியாக சென்று புகார் கொடுக்க வேண்டும். அதோடு சைபர் ஹெல்ப்லைன் 1930 என்று எண்ணை தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். மேலும் சைபர் க்ரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலிலும் புகார் அளிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.