
சிறை காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்துள்ளார். காவலர்களை வீட்டு வேலைக்கோ அல்லது தனிப்பட்ட வேலைக்கோ பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.