உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையில் வாட்சப் தனது பயனர்களுக்கு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. அதாவது இணையம் இல்லாவிட்டாலும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகளை பகிரும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த அம்சத்தை இயக்குவதற்கு நீங்கள் whatsapp சிஸ்டம் கோப்பு மற்றும் புகைப்பட கேலரி அணுகல் போன்ற அனுமதிகளை வழங்க வேண்டும். நீங்கள் அனுப்ப விரும்பும் நபர் மொபைல் ப்ளூடூத் இணைப்பை பெற்றிருக்கக் கூடிய அளவுக்கு அருகில் இருந்தால் மட்டுமே ஆஃப்லைன் பகிர்வது சாத்தியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.