டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகளை ஐசிசி அறிமுகபடுத்தியது. இதில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடியதோடு, இந்தியாவில் இதுவரை  3 பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றுள்ளன. இந்நிலையில் பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவில் இனி பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறாது என்ற கூறினார்.

அதாவது இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிகளை காண்பதற்காக ரசிகர்கள் 5 நாட்களுக்கும் சேர்த்து தான் டிக்கெட் வாங்குகின்றனர். ஆனால் இந்த டெஸ்ட் போட்டி 2 அல்லது 3 நாட்களிலேயே முடிந்து விடுகிறது. இதனால் மீதம் இருக்கும் நாட்களுக்குரிய டிக்கெட்டுக்கான பணத்தை எங்களால் திருப்பிக் கொடுக்க முடியாது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

அதனால் அவர்களின் நலனுக்காகவே பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார். இதற்கு முன்னாள் இந்தியாவில் நடைபெற்ற 3 பகலிரவு போட்டிகளுமே 3 நாட்களை தாண்டவில்லை. இதன் காரணமாக ஜெய் ஷா இந்த முடிவு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அங்கு ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.